இவ்வருடத்துக்கான ஷவ்வால் தலைப்பிறை சம்பந்தமான அறிக்கை-ACJU
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு
எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா எம்மனைவரையும் பொருந்திக் கொள்வானாக.
எதிர்வரும் 2014.07.27 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இவ்வருடத்துக்கான ஷவ்வால் மாதத் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் நாளாகும். கொழும்பு பெரியபள்ளிவாயல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்;டலுவல்கள் திணைக்;களம் ஆகிய முப்பெரும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு இன்ஷா அல்லாஹ் தலைப்பிறையைத் தீர்மானிப்பதற்காக 27.07.2014 ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாயலில் ஒன்றுகூடவுள்ளது
குறித்த தினத்தில்; ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகளைச் சேர்ந்த ஆலிம்கள் அவ்வப்பிரதேச மஸ்ஜிதுகளின் நிருவாகிகள், ஊர் பிரமுகர்கள் ஒன்றிணைந்து தங்களது பகுதியில் கூட்டாக பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் தங்களது பிரதேசத்தில் யாராவது பிறையைக் கண்டால் உடனடியாக தங்களுக்கு அறிவிப்பதற்கு இலகுவாக அமையும் விதத்தில் ஜம்இய்யா மற்றும் ஊர் பிரதிநிதிகள் உள்ளிட்;ட குழுவொன்று பி.ப 06:00 மணி முதல் தங்களது பகுதியில் கூட்டமொன்றை நடத்துமாறும் தலைமையகம் அனைத்து பிரதேசக் கிளைகளையும் வேண்டியிருக்கிறது.
ஷவ்வால் மாதத் தலைப்பிறை சம்பந்தமான பல்வேறு சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இத்திட்டத்தை அமுல் செய்கின்றது. எனவே யாராவது பிறை கண்டால் தமது பகுதியில் கூடியிருக்கும் அக்குழுவினரை தொடர்பு கொண்டு, தான் கண்ட பிறையை உறுதிசெய்து, அவர்களின் மூலமே கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு தொடர்பு கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து முஸ்லிம்களையும் கனிவாகக் கேட்டுக் கொள்கின்றது.
அன்றைய தினம் சூரியன் அஸ்தமிக்கும் போது அதன் அஸ்தமன இடத்தை அவதானித்துக் கொள்ளுமாறும், பிறை கண்டவர்கள் பிறை கண்ட நேரம், சூரியன் மறைந்த இடத்திலிருந்து வலது பக்கத்திலா அல்லது இடது பக்கத்;திலா பிறை தென்பட்டது, மற்றும் தலையை மிகவும் உயர்த்தியா அல்லது நடுத்தரமாக உயர்த்தியா அல்லது சாதாரன நிலையில் வைத்தா பிறையைப் பார்க்க வேண்டி ஏற்பட்டது என்பதன் மூலம் பிறை தென்பட்ட உயரத்தையும் அவதானித்துக் கொள்ளுமாறும் ஜம்இய்யா அனைவரையும் வேண்டுகிறது.
தலைப்பிறையைத் தீர்மானிப்பதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஒன்றுகூடும் இக்குழு தலைப்பிறை தொடர்பான இருதித் தீர்மானத்தை எடுத்து, அத்தீர்மானத்தை இலங்கை
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையினூடாக பொது அறிவித்தல் செய்யும். பிறைத் தீர்மானம், உத்தியோகப் பூர்வமாக தேசிய வானொலியின் மூலமே அறிவிக்கப்படும் என்பதையும் அவ்வுத்தியோகப் பூர்வ அறிவித்தல் வெளிவரும் வரை வழமையான வணக்கங்களில் ஈடுபடுமாறும் ஜம்இய்யா முஸ்லிம்களைக் கேட்டுக் கொள்கிறது.
ஏனைய தகவல் ஊடகங்களான குருஞ்செய்தி (ளுஆளு)இ வறவைவநசஇ கயஉநடிழழம முதலியன மூலம் வெளிவரும் தகவல்களுக்கு தலைப் பிறையைத் தீர்மானிக்கும் அமைப்பான கொழும்பு பெரியபள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் போன்றன எவ்விதத்திலும் பொறுப்பில்லை என்பதையும் அவ்வமைப்பு சார்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிவித்துக் கொள்கிறது.
வல்ல அல்லாஹ் இது விடயத்தில் நல்ல முன்னெடுப்புக்களை எடுத்துச் செல்ல நம்மனைவருக்கும் தவ்பீக் செய்வானாக. ஆமீன்!
………………………………
அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
பிறைக்குழு செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
More Visit>>
http://www.acju.lk/ta/press-release-ta/hilaal-shawwaal/
Latest Jumuahs
Ash Sheikh Irfan Mubeen(Rahmani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Siyam Ashar(Hashimi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh M.I.M Rizwe Mufthi(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Siyam(Rahmani)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Yoosuf Mufthi(Binnoori)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Malwana, Raxapana Jumua Masjidh
Ash Sheikh Hassan Fareed(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh M.I.M Rizwe Mufthi(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Colombo 12, Peer Sahib Street Ihsaniyyah Jumuah Masjith
Latest Special Bayans
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Kurunegala, Mallawapitiya, Masjidhul Hasanath
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
Your Comments