அந்நிய மத புராதன தலங்களைப் பார்வையிடும் போது இஸ்லாமிய மார்க்க ஆடைகளை விட்டுக் கொடுக்க முடியுமா??
அந்நிய மத புராதன தலங்களைப் பார்வையிடும் போது இஸ்லாமிய மார்க்க ஆடைகளை விட்டுக் கொடுத்தல், ஆண் பெண் கலந்த விஞ்ஞான வகுப்பை ஆரம்பித்தல்
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
அந்நிய மத புராதன தலங்களைப் பார்வையிடும் போது இஸ்லாமிய மார்க்க ஆடைகளை விட்டுக் கொடுத்தல்
இஸ்லாம் என்பது ஒரு தெளிவான, மனிதனுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய மார்க்கமாகும். அதில் முஸ்லிம்களுடைய ஆடைகள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் எமக்கு விபரமாக வரையறுத்துச் சொல்லியுள்ளது. முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள் ஆகிய மூன்று சாராரும் தாம் கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதிகள் எவை, அவர்களுக்கு ஸுன்னத்தான ஆடைகள் எவை மேலும் இஸ்லாமியர்களை சித்தரித்துக் காட்டக் கூடிய கலாச்சார ஆடைகள் எவை என்பது எமது மார்க்கத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அவற்றைக் கற்று, அதன் பிரகாரம் தனது ஆடைகளை அணிந்து கொள்வது முஸ்லிம்களின் கடமையாகும்.
முஸ்லிமான மாணவ, மாணவிகள் கல்விச் சுற்றுலாச் செல்லும் சந்தர்ப்பங்களில் அந்நிய மத புராதன தலங்களைப் பார்வையிடும் போதோ, அல்லது அது போன்ற சந்தர்ப்பங்களிலோ இஸ்லாமிய ஆடைகளைக் கழற்றி விட்டு செல்லுமாறு பணிக்கப்பட்டால், இஸ்லாத்துக்கு முன்னுரிமை கொடுத்து இஸ்லாமிய விழுமியங்களைப் பாதுகாத்து நடப்பதுடன் அவ்வாறான இடங்களைப் பார்வையிடுவதைத் தவிர்த்துக் கொள்வது முஸ்லிம்களுடைய கடமையாகும்.
ஆண் பெண் கலந்த விஞ்ஞான வகுப்பை ஆரம்பித்தல்
பெண்கள் கல்வி கற்பதையும், கற்பிப்பதையும் இஸ்லாம் தடை செய்யவில்லை. எனினும் ஆண், பெண் இரு பாலாரும் கலந்து திரைகள் இன்றி ஓரிடத்தில் கற்கும் சூழலை இஸ்லாமிய ஷரீஆ அனுமதிக்கவில்லை. ஏனெனில் இரு பாலார் கலப்பினால் பல தீமைகளும், விபரீதங்களும் ஏற்படுகின்றன. இதனை இன்றைய மேற்குலகின் நடப்புகள் உறுதி செய்கின்றன. தீமைகளும், ஒழுக்கவீனச் செயல்களும் சிறு பருவத்தில் இருந்தே தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக தீமைகள் நடைபெறலாம் என்று கருதப்படும் அவற்றின் வழிகளை அடைத்தல் என்பதும் கடமையாகும். இதன் காரணமாகவே பத்து வயதுச் சிறுவர்களைக் கூட படுக்கையில் பிரித்து வைக்குமாறு ஷரீஆ கட்டாயப் படுத்துகின்றது. இதனைப் பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது:
“உங்கள் பிள்ளைகளை அவர்கள் ஏழு வயதினர்களாக இருக்கும் போது தொழுகையைக் கொண்டு ஏவுங்கள். அவர்கள் பத்து வயதினர்களாக இருக்கும் போது அதற்காக அவர்களை அடியுங்கள். படுக்கைகளில் அவர்களுக்கிடையில் பிரித்துவையுங்கள்” என்று நபி (சல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹுஅன்ஹுமா) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(நூல்: ஸுனனு அபீ தாவூத் – ஹதீஸ் எண் : 495)
எதிர் பாலாரின் பார்வைகள் கூட கலக்கக் கூடாது. இதுவும் தீமைக்கு வழி வகுக்கும் என்பது இஸ்லாத்தில் ஒரு பொது விதியாகும். இதனைப் பின்வரும் அல்-குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது:
“(நபியே!) விசுவாசிகளுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும், தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிக் காத்துக் கொள்ளவும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கு உணர்பவன்.”
(அல்-நூர் : 30)
மஸ்ஜித்கள், வணக்கங்களின் போது கூட இது விடயத்தில் நபித் தோழர்களின் பெண்கள் மிகவும் பேணுதலுடனும், கவனத்துடனும் செயற்பட்டுள்ளனர். இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது:
“நபி (சல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையைத் தொழுவார்கள். முஃமினான பெண்களும் அவர்களுடன் தொழுகையில் கலந்து கொள்வார்கள். அப்பெண்கள் தங்களது ஆடைகளால் தங்கள் மேனிகளை முழுமையாக மறைத்துப் போர்த்திக் கொண்டு வருவதனால் அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களை யாரும் அறியமாட்டார்கள்” என்று ஆயிஷா (ரழியல்லாஹுஅன்ஹா) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(நூல்: சஹீஹுல் புகாரி – ஹதீஸ் எண் : 365)
எனவே, எதிர் பால் கலப்புடன் கல்வி கற்பதற்கோ, கற்றுக் கொடுப்பதற்கோ ஷரீஆவில் அனுமதி கிடையாது.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
LIKE US:
https://www.facebook.com/acmycweb1
More Visit>>
http://www.acju.lk/ta/fatwa-ta/096/
Latest Jumuahs
Ash Sheikh Irfan Mubeen(Rahmani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Siyam Ashar(Hashimi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh M.I.M Rizwe Mufthi(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Siyam(Rahmani)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Yoosuf Mufthi(Binnoori)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Malwana, Raxapana Jumua Masjidh
Ash Sheikh Hassan Fareed(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh M.I.M Rizwe Mufthi(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Colombo 12, Peer Sahib Street Ihsaniyyah Jumuah Masjith
Latest Special Bayans
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Kurunegala, Mallawapitiya, Masjidhul Hasanath
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
Your Comments