அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ
சகோதர சகோதரிகளே....
இந்த உலகமும் அதில் உள்ளவைகளும் வீணும் விளையாட்டுமின்றி வேறில்லை....
இந்த உலகத்தின் மேல் நாம் கொண்டுள்ள பற்றுதல் இறைவனை விட்டும் நம்மை திருப்பிவிட வேண்டாம்....
கடலில் ஒரு விரலை முக்கி அந்த விரலை எடுக்கும் போது அந்த விரலிருந்து வடியும் ஒரு துளி நீர் தான் இந்த உலகம்....என்பது நபிமொழியாகும்.....
அறிவியலின் வளர்ச்சி உயர உயர நாகரீகத்தின் வளர்ச்சி கேவலமான அவல நிலையை அடைகிறது....
டிவி யினால் சீரழிந்த சமூகம் போய் செல்போனால் சீரழிவு வந்தது....இப்போது ஒரு படி மேலே போய் இண்டர்நெட் என்கிற பெரிய இப்லீஸ் மக்கள் மத்தியில் களமிரங்கி மக்களை வழிகெடுக்கிறது.....
இண்டர்நெட் என்பது ஒரு அறிவுபூரணமான தகவல் கூடமாக உள்ளது....ஆனால் அது இப்போது விபச்சார ஊடகமாக நடத்தபடுகின்றது..
Hai என்ற வார்த்தையில் ஆரம்பித்து....புரியம் என்று நினைக்கிறேன்....
ஆண்கள் தான் இவ்வாறு என்றால் பெண்கள் அதற்கும் மேல.....
Hai னு ஆரம்பிச்சி ஊரு பெயரு வயசு அப்படினு போய்கொண்டே இருக்கும்....
பேசக் கூடாததெல்லாம் பேசி voice mail அனுப்புறது....
பார்க்க கூடாததெல்லாம் youtube மூலமாக பார்ப்பது....
Skype மூலமாக உல்லாச உறவாடல் ......
உடல் ரீதியான தவறுகள் நடைபெற்றால் தான் விபச்சாரமா?
நபி அவர்கள் கூறினார்களே....
பார்க்க கூடாததே பார்ப்பது கண் செய்யும் விபச்சாரம்....போக கூடாத இடத்திற்கு போவது கால் செய்யும் விபச்சாரம்....பேச கூடாததையெல்லாம் பேசுவது வாய் செய்யும் விபச்சாரம் அல்லவா?
தெரிந்துக்கொண்டே இவ்வாறு இருக்கிறோமே...இறைவனின் பயமில்லையா?
அந்நிய ஆண்களோடு யாரென்று தெரியாதவர் கூடயெல்லாம் தனிமையில் chat பண்ணுவது தவறல்லவா....இதை இஸ்லாம் அணுமதிக்கவில்லையே....
முகநூல் என்பதை எவ்வளவு நல்லவழியில் பயன்படுத்தலாம்....ஆனால் அதனை நாம் எல்லோரும் எவ்வாறு பயன்படுத்திகிறோம் என்பதை சிந்தித்து பார்போம்..
மார்க்கத்தை பற்றிய கேள்விகள் என்று ஆரம்பித்து அநாகரீகமாக பேச முயல்வோர் நம்மில் எத்தனை பேர்?
முகநூலில் இஸ்லாமிய பெண்கள் பிறர் பார்க்கும் விதமான profile picture ரில் தனது போட்டோவை add பண்ணும் இஸ்லாமிய பெண்களே இஸ்லாம் காட்டி தந்த வெட்க உணர்வை எங்கே தொலைத்தீர்கள்....?
வெட்கமில்லை எனில் நீ எதை வேண்டுமானாலும் செய்துகொள் என்று நபி அவர்கள் கூறினார்களே வெட்கத்தை இழந்ததனால தான் இவ்வளவு தரகுறைவான காரியங்களை செய்கிறீர்களா?
இன்னும் சிலர் தான் போட்டோ வைக்கமாட்டாங்க.
ஆனால் விபச்சாரத்திலே தனது இருப்பிடங்களே ஆக்கி கொண்ட சினிமா கூத்தாடிகளின் படங்களை இணைத்துக்கொண்டு முகநூலில் வலம்வருகின்றனர்....இதனால் நீங்கள் பெருமை கொள்ளாதீர்கள்.....வெட்கபடுங்கள்...அசிங்க படுங்கள்.....
இன்னும் சிலர் மார்க்க விஷயங்களை ஷேர் செய்யவும்....மார்க்கத்தில் மிகுந்த ஈடு பாடு கொண்டது போல காமாண்ட் பண்ணவும் செய்றாங்க...ஆனால் அவங்க பொரொபைலை கொஞ்சம் திறந்து பார்த்தால் இந்த சினிமா விபச்சார கூத்தாடிகளுக்கு லைக்ஸை அள்ளி அள்ளி வழங்கி வைக்கிறாங்க.....
யாரை இவ்வுலகில் நாம் பின்பற்றுகிறோமோ அவர்களுடனே நாளை மறுமையில் இருப்போம்...
அப்படியானால் இந்த கூத்தாடிகளின் இருப்பிடம் நரகமன்றோ...விபச்சார ஊடகத்திற்கு துணைபோனால் நம் நிலை...
அல்லாஹ் பாதுகாப்பானாக...
நபி அவர்களின் நபிமொழிகள் எவ்வளவோ உள்ளன....மார்க்க விஷயங்கள் எவ்வளவோ உள்ளன... அவைகளை நமக்கிடையில் பகிர்ந்துகொள்வோம்....
அல்லாஹ் கூறுகிறான்...
நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிசெய்துகொள்ளுங்கள்...
பாவத்திலும் பகைமையிலும் ஒருவருக்கொருவர் உதவிசெய்துகொள்ளாதீர்கள்..
தகாத கூடாதவைகளையெல்லாம் பார்க்காதீர்கள்....நம் உறுப்புகள் ஒவ்வொன்றும் நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் முறையிடும்....
அந்நிய பெண்களுடன் பேசுவதை ஆண்களும் அந்ரிய ஆண்களுடன் பேசுவதை பெண்களும் தவிர்ந்துக்கொள்ளுங்கள்.....
நாகரீக வளர்ச்சி என்றும் நம் ஒழுக்கத்தை சீரழிக்க வேண்டாம்....
அல்லாஹ்வுக்கு மறைவிலும் அஞ்சுபவர்கள் தான் இறையடியார்கள்.....
நம் இறைவனின் நேசத்தை அடைய வேண்டுமென்றால் ஹராமான காரியங்களை விட்டும் விலகி செல்வோம்.
அன்பான முஸ்லிம் சகோதர,சகோதரிகளே உங்களிடம் அன்பாக நாம் வேண்டிக் கொள்வது இந்த விடயத்தை அதிகமாக உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள் அவர்களும் தெரிந்து கொள்ளட்டும்.
Latest Jumuahs
Ash Sheikh Irfan Mubeen(Rahmani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Siyam Ashar(Hashimi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh M.I.M Rizwe Mufthi(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Siyam(Rahmani)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Yoosuf Mufthi(Binnoori)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Malwana, Raxapana Jumua Masjidh
Ash Sheikh Hassan Fareed(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh M.I.M Rizwe Mufthi(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Colombo 12, Peer Sahib Street Ihsaniyyah Jumuah Masjith
Latest Special Bayans
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Kurunegala, Mallawapitiya, Masjidhul Hasanath
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
Your Comments