நம்மில் அதிகமான திருமணம் முடித்த பெண்கள் தமது பெயருக்குப்பின் தமது கணவனின் பெயரைப்போடுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார்கள். இஸ்லாத்தைப்பொருத்த வரை இது அனுமதிக்கப்படாத செயலாகும்.
ஏனெனில் நாளை மறுமை நாளில் எங்களின் பெயர்கள் தந்தைமாருடைய பெயருடன் இனைத்தே அழைக்கப்பட இருக்கின்றது. அது மட்டுமன்றி இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழியும் அல்ல.
அதிகமான நமது பெண்கள் கணவனின் பிரபல்யத்திற்காக தனது பெயருடன் கணவனின் பெயரை இணைப்பதையே கௌரவமாக நினைக்கிறார்கள். அதுவே தனது பெயருடன் இஸ்லாம் கூறித்தந்துள்ள முறைக்கு மாற்றமாக தனது தந்தையின் பெயரை உபயோகிக்காமல் கணவனின் பெயரை உபயோகிப்பதற்கான வாய்ப்பாகவும் எடுத்துக்கொள்கின்றார்கள்.
சரி இப்படி மார்க்கத்திற்கு மாற்றமாக நடப்பவர்களிடம் நான் ஒரு கேள்வியை கேற்க வினைகிறேன்.....
உலகையே மாற்றிய மாபெரும் மனித மாணிக்கமான எமது உயிரிலும் மேலான கண்மனி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மனைவிகளின் பெயர்களில் எவருடையதாவது பெயருக்குப்பின்னால் நபிகளாரது பெயர் உபயோகிப்படுகின்றதா?
மாற்றமாக அவர்களது தந்தைமார்களது பெயர்களே உபயோகிக்கப்படுகின்றது. உமது கணவர் நபிகளாரைவிட எந்தவிதத்திலும் மேலாகப்போவதில்லை. இஸ்லாம் இப்படி கணவர்மார்களுடைய பெயர்களை பாவிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தால் உண்மையில் நபியவர்களின் மனைவிமார்களல்லவா முதன்முதலின் கணவனின் பெயரை தமது பெயருக்குப்பின்னால் உபயோகித்திருப்பார்கள்.
உண்மையில் இது மிகத்தரங்குறைந்த இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான அனுகு முறையாகும். தற்காலத்தில் இத்தகைய தவறுகள் திருமன அழைப்பு அட்டைகளில் பரவலாக காணக்கூடியதாக உள்ளது.
இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். யாரும் பெரிதாக கவனித்திராத மிகப்பெரிய தவறாகும். உதாரணமாக மணமகனின் தந்தையின் பெயர் முஹம்மத் என்றால் பெற்றோரின் பெயரை இடும் போது MR & MRS முஹம்மத் எனப்போட்டு விடுகின்றார்கள். அதை விட கொடுமையான விடயம் இன்னும் சில அழைப்பு அட்டைகளில் மனமகளின் பெயருக்குப் பின்னால் மனமகனின் பெயரை இட்டு விடுகின்றார்கள்.
இவை அனைத்தும் இஸ்லாம் காட்டித்தந்திடாத கீழ்த்தரமான நடைமுறைகளாகும். இதன் பிறகாவது இத்தகைய தவறுகளை விடுவதில் இருந்து எங்களைப் பாதுகாத்துக்கொள்வோம்.
அடுத்தவர்களுக்கும் இதனை எத்தி வைப்போம். இவ்வுலகம் நிரந்தரமற்றதாகும் வெறுமனே பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு இஸ்லாத்தை விட்டுகொடுத்தால் நாளை மறுமையில் கைசேதப்படுவதை விட வேறு வழி இருக்காது.
எனவே இஸ்லாம் கூறிய பிரகாரம் எமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம் இன்ஷா அல்லஹ் வல்லவன் அல்லாஹ் அதற்கு துணை புரிவானாக.
Your Comments