அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!
ஏன் இப்படி கீழ் தரமான முறையில் செயற்பட வேண்டும். புனித மார்க்கமான இஸ்லாத்தை ஏற்ற நாம் இப்படி சீரழியலாமா? கலிமாவை ஏற்றுக்கொண்டு, தலையை மூடிக்கொண்டு இது நியாயமா? பொது இடங்களில் மட்டுமல்ல தனிமையில்கூட இது ஹறாம்தான். திருமணத்திற்கு பிறகு ஹலாலான அமைப்பில் இவ்வாறான விடயங்களில் ஈடுபடலாமே. அதனைவிட்டுவிட்டு ஹறாத்தில் ஏன் வாழ வேண்டும்.
திருமணமானவர்கள் கூ ட தவறுசெய்கிறார்கள். திருமணமானவர்கள் சிலர் வெளிநாடுகளுக்கு சென்று கள்ளக் காதலி/ கள்ளக் காதலனைத் தேடுகிறார்கள. திருமணமாகாத சிலர் விபச்சாரிகளை தேடுகிறார்கள். சிலர் முஸ்லிம் அல்லாதேரை திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
முஸ்லிம் அல்லாத ஒருவரை திருமணம் செய்ய வேண்டுமென்றால் முதலில் அந்த நபர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்தான் நிக்காஹ் செய்து கொள்ளலாம்.
ஆனால் முஸ்லிம் சமூகம் சீரழிகிறது. திருமணமாகாமல்கூட இன்று குழந்தைகளை சிலர் பெற்று கொள்கிறார்கள். ஹறாத்தில் அந்த குழந்தை பிறக்கிறது.
இப்படிப்பட்ட பெண்களுக்கு அறிவு இல்லையா?
ஆண்கள் என்ன முட்டாள்களா?
காம மோகத்தில் தவறு செய்வதால் காலமெல்லாம் கண்ணீரோடு வாழவேண்டும் என்று மறந்து விட்டார்களா அல்லது மௌத்துக்கு பிறகு இன்னுமொரு வாழ்க்கை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்களா?
மனைவியை வைத்துவிட்டு வேறு சுகத்துக்காக அலையும் ஆண்களும் கணவனை வைத்துவிட்டு வேறு சுகத்துக்காக அலையும் பெண்களும் இன்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
பெற்றோர்களே! சற்று அல்ல மிகவும் அவதானமாக இருங்கள் உங்கள் பிள்ளைகளின் மேல்.
மனைவிமார்களே! உங்கள் கணவர் மீது நீங்கள் நம்பிக்கை வைப்பது என்பது அவசியம்தான். ஆனாலும் சற்று அவதானமாக இருங்கள்.
கணவர்மார்களே! மனைவி மீது இரக்கமும் நம்பிக்கையும் அவசியம்தான் இருந்த போதிலும் அவதானமாக இருங்கள்.
விபச்சாரத்தில் சீரழியும் சில முஸ்லிம்கள்! என்ற தலைப்பு இட்டது இவ்விடத்தில் ஏன் என்றால் சிலர் செய்யும் தவறுகளால் முழு முஸ்லிம்களுக்கும் கெட்ட பெயர் வருவது நாம் அறிந்ததே. அந்த கெட்ட பெயரை நாம் அடியோடு அழிக்கவேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எப்போது நம் சமுகம் திருந்தப் போகிறது?
இன்று உலகில் நடப்பவற்றைத்தான் இங்கு குறிப்பிட்டு இருக்கிறோம். யாருடைய மனதும் புன்படுவதற்காக இவற்றை கூறவில்லை. அதற்காக சந்தேகமும் படச்சொல்லைவில்லை. மாறாக நம் சமுகத்திற்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்களும் விழித்துக் கொள்ள வேண்டும்.
(உங்கள் மனதையும் எண்ணங்களையும், புண்படுத்தும் நோக்கில் இவை இங்கு குறிப்பிடப்படவில்லை. தயவுசெய்து யாருடைய மனதும் புன்பட்டால் மன்னித்துக்கொள்ளுங்கள்)
Your Comments