ஒரு பெண் தவரிளைக்கிறாள், கெட்டுப் போகிறாள் என்றால், அதற்கு நிச்சயமாக அவளுக்கு பொறுப்பான ஆணே காரணம் ஆகிறான். தகப்பன், கணவன், சகோதரன் என்போர், தனக்கு இறைவனால் அமானிதங்களாக வழங்கப்பட்ட பெண்களை, அவர்களின் தேவைகளை சரிவர நிறைவேற்றிக் கொடுக்காமல், பொடுபோக்காக விடுவதே பெண்களின் இந்த நிலைக்கு காரணம். இதில் முக்கிய பங்கு வகிப்பது அவர்களின் ஆடை அணிகலன்கள்.
தனது உள்ளாடைகளின் மடிப்புகள் தெரியும் அளவுக்கும், தனது உடல் அங்கங்களை (மார்புப் பகுதி, இடுப்பு, பின்புறம் என ) அச்சொட்டாக அப்படியே வெளியில் காட்டும் அளவுக்கும் இன்று அபாயாக்களை இறுக்கமாகவும் ஆபாசமாகவும் தைக்கிறார்கள் சில பெண்கள். இழுபடக் கூடிய பெனியன் துணிகளாலும் சில பெண்கள் இன்று அபாயாக்களை தைக்கிறார்கள். இதனால் அந்த துணி அப்படியே உடலோடு ஒட்டி அனைத்தையும் வெளிக் காட்டுகிறது.
இந்த அபாயாக்களுடன் நகர வீதிகளில் வளம் வரும் நமது பெண்கள், அந்நிய சமூகத்து குட்டை பாவாடை, Tshirt, Denim, Short Shalwar , சாரி என்பவைகளை கூட பின் தள்ளி முதல் இடம் பிடிக்கிறார்கள். அதை விட கேவலம், இப்படியான அபாயாக்களுடன் நமது ஆண்கள் (தகப்பன், கணவன், சகோதரன்) அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்னால் வைத்து கூட்டிப் போகும் போது, இதை பார்த்துக் கொண்டு வரும் நமது இளைஞ்ஞர்கள் விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகளும் நமது சமூகத்தில் இடம் பெறுகிறது.
வருகிறது புனித ரமழான் மாதம். அதனை தொடர்ந்து நோன்புப் பெருநாள்.
> பெருநாள் ஆடைகளை கொள்வனவு செய்ய இப்போதே தயாராகிக் கொண்டிருக்கும் பெண்களே!
> இந்த பெண்களுக்கு பொறுப்பாளர்களான ஆண்களே!
> இது போன்ற அபாயாக்களை விற்பனைக்காக கொள்வனவு செய்து, செய்யவிருக்கும் பிடவைக் கடைக் காரர்களே! Abaya Centre களை வைத்திருப்பவர்களே!
> மற்றும் சமூக அக்கறையுள்ள நலன் விரும்பிகளே!
இந்த சமூக சீர்கேட்டை தவிர்க்க உங்களுக்கும் பொறுப்புகள் உண்டு. எமது இளைஞ்ஞர் யுவதிகளை, பெண்களை பாதுகாக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு. ஆகவே இந்த ரமழானில் இருந்து, இப்படியான அழிவுகளில் இருந்து நம் சமூகத்தை பாதுகாத்து, அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை தேடிக் கொள்ள முயற்சி செய்வோமாக. ஆமீன்.
Your Comments