ஒரு மூதாட்டியை தேடிக்கொண்டு அநாதை இல்லத்திற்குச் சென்றிருந்தார் ஒருவர்.
அநாதை இல்லத்தின் ஒரு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார் அந்த மூதாட்டி அழைத்த அவருடைய குரலுக்கு அவசரமாக முந்தாணியை தலையில் போட்டுக் கொண்டு எழுந்து அமர்ந்தார்கள்.
தாயே! உங்கள் கணவர் எங்கே? என்று வினவ.
அவர் இருக்கிறார். என்னை வந்து பார்த்துவிட்டுப் போவார். சில நாட்களாக வரவில்லை மகனே என்றார்.
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? என்று வினவ
ஆம்! மகனே! மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். படித்தவர்கள் என்றார்.
அந்த மூதாட்டியிடம் அதற்கு மேல் என்ன கேட்க வேண்டி இருக்கிறது?
பேச்சுக்கூட வர மறுத்துவிட்டது அவருக்கு. திரும்பி வந்துவிட்டார்.
அப்போது "நீ எப்படி நடந்து கொள்வாயோ அப்படியே நடத்தப்படுவாய்" என்ற அறேபியப் பழமொழியே அவருக்கு நினைவுக்கு வந்தது.
பாவம் பிள்ளைகள்.
மற்றவர்களுக்கும் இந்தப் பதிவு பிரயோசனப்படும் என நீங்கள் நினைத்தால் இதை SHARE செய்யுங்கள் அல்லாஹ்விற்காக!
Your Comments