அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு..
இளைய சமுதாயமே....!
திருமணம் முடிப்பதினால் ....
நீங்கள் எதையாவது தியாகம் செய்கிறீர்களா ....?
ஆனால் ......
உங்களுக்கு மனைவியாக வருகிறவள்
என்னவெல்லாம் தியாகம் செய்து வருகிறாள் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா ...?
உனக்காக - தன் உறவுகளை தியாகம் செய்கிறாள் ....
உனக்காக - தன் உடன்பிறப்புகளை தியாகம் செய்கிறாள் ....
உனக்காக - தனது எதிர்பார்ப்புகளை தியாகம் செய்கிறாள் ....
உனக்காக - தனது இளமை , அழகை தியாகம் செய்கிறாள் ....
உனக்காக - குழந்தையை சுமக்கிறாள் ....
உனக்காக - கஷ்டத்தை சுமக்கிறாள் .....
இன்பம் அனுபவிப்பது இருவரும் ......
ஆனால் ....
கஷ்டப்படுவது அவள் மட்டும் .....!
இப்படி ...
தியாகத்தையே வாழ்க்கையாக அனுபவிக்கும் அவளுக்கு ...
நீ மஹர் கொடுத்து மணமுடிப்பதுதானே ...
உண்மையான மனிதாபிமானம் .....?
ஆனால் ....
வரதட்சணை என்ற பெயரில் ....
எப்படி அவளிடத்தில் பிடுங்கி திங்க உனக்கு மனசு வருகிறது ...?
உனக்கு வெட்கமாக இல்லையா ........?....?
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்....!
மறுமையில் இறைவன் முன்னால் நீ கேவலப்பட்டு விடாதே...
சிந்தித்து திருந்துவதற்காக இ்ந்த பதிவை இங்கு பதிவிட்டோம்...
யாரையும் சுட்டிக் காட்டுவதற்காக அல்ல....
இந்த பதிவை வாசிக்கும் போது மற்றவர்களை எண்ணாமல்....
எம்மைப் பற்றி(அதாவது உங்களைப் பற்றி) சிந்தியுங்கள்...
மற்றவர்களின் குறையைத் தேடி தேடித்தான் இன்றைய எம் சமூகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
மற்றவர்களும் இந்த பதிவை வாசித்து திருந்த நீங்கள் விரும்பினால் இந்த பதிவை SHARE செய்யுங்கள் ..
Your Comments