நாம் எதிர் நோக்கியிருக்கும் ஜனாதிபதித்தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு தேர்தலாகும்.
இந்த தருணத்தில் முஸ்லிம்களாகிய நாம் செய்ய வேண்டிய வணக்கங்கள் (அமல்கள்) சில இருக்கின்றன.
அவைகளை நாம் செய்வோம் என்றால் அது முஸ்லிம்களாகிய நாம் மட்டுமல்ல இலங்கை வாழ் மக்கள் அனைவரையுமே ஐக்கியமாகவும் ஒற்றுமையாகவும் வாழ வழிவகுக்கும்.
அதற்கானசிலவழிமுறைகள்:
1. யார் எதைச் சொன்னாலும் அல்லாஹ்தான் அனைத்தையும் செய்கின்றவன் எனும் ஈமானிய உணர்வை நாம் என்றும் மறக்கக்கூடாது.
இதன் மூலம் நாம் விளங்குவது ஆட்சியாலனைத் தீர்மானிப்பவனும் அல்லாஹ்தான் ஆட்சியாளனை ஆட்சியிலிருந்து கவிழ்ப்பவனும் அல்லாஹ்தான் என்பதை நாம் மனதில் ஆழப்பதித்துக் கொள்ளவேண்டும்.
2.பாவங்களில் ஈடுபடாமல் அவற்றை உள்ளத்தால் வெறுத்து அல்லாஹ்வுக்கு வழிப்படுவோம். ஏனெனில் அப்போதுதான் எமது ஆட்சியாளர்களை எம்முடன் கருனையுள்ளவர்களாக அல்லாஹ் மாற்றித்தருவான். இதனைத்தான் பின்வரும் ஹதீஸே குத்ஸீ தெளிவுபடுத்துகின்றது.
"ஆட்சியாளர்களுக்கெல்லாம் ஆட்சியாளன் நானே. ஆட்சியாளர்களின் உள்ளங்கள் எனது கையில்தான் உள்ளது"
எனவே என் அடியார்கள் எனக்கு வழிப்பட்டால் அவர்களது ஆட்சியாளர்களின் உள்ளங்களை அவர்களுடன் கருனையுள்தாகவும் இரக்கமுள்ளதாகவும் மாற்றிவிடுவேன்.
என் அடியார்கள் எனக்கு மாறு செய்தால் அவர்களது ஆட்சியாளர்களின் உள்ளங்களை அவர்களுடன் வேதனை செய்யக் கூடியதாகவும் கோபப்படக் கூடியதாகவும் மாற்றிவிடுவேன். அந் நேரத்தில் உங்களது ஆட்சியாளர்களுக்கு ஏசியும் துஆக்கேட்டு ம்உங்களை நீங்கள் வீணாக்கிக் கொள்ளாதீர்கள். அந்த ஆட்சியாளர்களின் சீர்சிருத்தம் உங்களது சீர்சிருத்தத்தைக் கொண்டே இருக்கின்றது.
3. இன்றிலிருந்து அதிகமாக இஸ்திஃபார் (பாவமண்ணிப்பு) செய்வோம்.
لاَ إلهَ إلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْن
( லாஇலாஹஇல்லாஅன்தசுப்ஹானகஇன்னீகுன்துமினழ்ழாலிமீன் )
அல்லாஹ்வைத் (உன்னைத்) தவிர வேறு இறைவன் இல்லை நீ தூய்மையானவன் நிச்சயமாக நான் அநியாயம் (பாவம்) செய்து கொண்டிருக்கின்றேன் (என்னை மண்ணித்து விடு)
இன்றிலிருந்து முடிவு வரும் வரையில் இந்த இஸ்திஃபாரை அதிகமாக ஓதுவோம்.
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள் : யார் பாவ மண்ணிப்பில் ஈடுபடுகின்றாரோ அவருக்கு ஏற்பட்டிருக்கின்ற கஸ்ட்டங்களையும் துன்பங்களையும் அல்லாஹ் போக்கிவிடுகின்றான்
எனவே எம் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற அவல நிலை நீங்க வேண்டுமென்றால் நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் பாவமண்ணிப்புத் தேடுவதில் ஈடுபடுவோம்.
4. அதே போன்று இந்த திக்ரையும் அதிகமாக ஓதுவோம்.
حَسْبِيَ اللهُ
ஹஸ்பியல்லாஹ்
(அல்லாஹ் எனக்குப் போதுமானவன்)
حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيْل
(ஹஸ்புனல்லாஹு வனிஃமல்வகீல்)
அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்.
அன்றைய நாளில் வீணாணவைகளை விட்டு விட்டு திக்ர், துஆ போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவோம்.
5. நாம் அதிகமாகது ஆவில் ஈடுபடுவோம்>>>
ஏனெனில் அல்லாஹ்து ஆவின் மூலம் எமது கலா கத்ரை மாற்றியமைக்கின்றான்.
இன மத மொழி வேறுபாடின்றி எல்லாமக்களும் சந்தோசமாக மனநிம்மதியாக ஐக்கியத்துடன் வாழ அல்லாஹ்விடத்தில் கையேந்துவோம்.
குறிப்பாக கீழ்வரும் துஆக்களையும் கருத்து விளங்கி அதிகமாக அல்லாஹ்விடத்தில் கேட்போம்.
اللهمَّ لَا تُسَلِّطْ عَلَيْنَا بِذُنُوْبِنَا مَنْ لاَ يَخَافُكَ فِيْنَا وَلاَ يَرْحَمُنَا
(அல்லாஹ}ம்மலாது ஸல்லித் அலைனா பிதுனூபினாமல் லாயஹாபுக பீனா வலா யர்ஹமுனா)
யாஅல்லாஹ் நாம்செய்யும் பாவங்களினால் உனக்கு அச்சப்படாத எங்களுக்கு இரக்கம்காட்டாத ஆட்சியாளர்களை எமக்கு சாட்டிவிடாதே !
أللهم إنِّيْ أعُوْذُ بِكَ مِنْ قَهْرِ الرِّجَالِ
(அல்லாஹ}ம்ம இன்னீ அஊதுபிக மின்கஹ்ரிர்ரிஜால்)
யா அல்லாஹ் மனிதர்களின் அடக்குமுறையிலிருந்து உன்னிடத்தில் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
أللهم إنِّيْ أعُوْذُ بِكَ مِنْ غَلَبَةِ الرِّجَالِ
(அல்லாஹ}ம்ம இன்னீ அஊதுபிக மின்எலபதிர்ரிஜால்)
யா அல்லாஹ் மனிதர்கள் எங்களை மிகைப்பதிலிருந்து உன்னிடத்தில் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
6. குறிப்பாக தேர்தல் தினத்திலன்று தஹஜ்ஜத் நேரத்திற்கு எழும்பி தஹஜ்ஜத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு இந்நாட்டிலும் ஏனைய சர்வதேசநாடுகளிலும் முஸ்லிம்களுக்கு சாதகமான நல்லாட்சி நிலவ அல்லாஹ்விடத்தில் இரைஞ்சுவோம்.
7. தேர்தலன்று சுபஹ் தொழுகையை நிறைவேற்றிவிட்டு சூறா யாசீனை ஓதி முஸ்லிம்களுக்கும் ஏனையவர்களுக்கும் சாதகமான ஆட்சிநிலவுவதற்கு துஆச் செய்துவிட்டு வாக்களியுங்கள்.
(அன்றைய தினம் இந்நிகழ்வை நாட்டிலுள்ள ஒவ்வொரு மஸ்ஜிதிலும் செய்தால் அதுமிகஏற்றமானது)
8. முடியுமானவர்கள் அன்றையதினம் நோன்பு பிடியுங்கள்.
9. எக்கட்சிக்கு எமது ஆதரவு இருந்தாலும் அதற்காக வேண்டி எமக்கு மத்தியில் காணப்படும் ஒற்றுமையை இழந்துவிடாது நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம்.
குறிப்பாக தேர்தல் முடிவின் பின் யாரினதும் உள்ளங்களை உடைத்துவிடாது அனைவரினதும் உள்ளங்களை சந்தோசப்படுத்துவோம்.
10. வெற்றியோ தோல்வியோ எது ஏற்படினும் கலா கத்ரின் படி அல்லாஹ்வின் நாட்டம் நடந்தேறியது என்கின்ற ஈமானை உள்ளத்தில் வளர்த்துக் கொண்டு தோல்வியில் பொறுமையுள்ளவர்களாகவும் அல்லது வெற்றியின் குதூகழிப்பில் யாரையும் புன்படுத்தாது அல்லாஹ்வை சந்தோசப்படுத்தக் கூடியவர்களாகவும் மாறுவோம்.
அன்பின் இலங்கைவாழ் முஸ்லிம்களே! இவைகளை கடைப்பிடியுங்கள் நிச்சயம் நாம் எதிர்பார்க்கும் முடிவை அல்லாஹ்தருவான்.
சர்வதேசமுஸ்லிம்களே !
இலங்கைவாழ் முஸ்லிம்களுக்காக இக்கட்டத்தில் நீங்கள் செய்யும் உதவிதுஆதான்.
எனவே ! எதிர்வரும் ஜனாதஜபதித் தேர்தலை முன்னிட்டு இந்நாட்டு முஸ்லிம்களுக்காகது ஆச் செய்யும்படி தயவாய் வேண்டிக் கொள்கின்றேன்.
ஆக்கம்>>>>>
அஸ்ஷேக் - ஆரிப்ஹாபிஸ் (ஸஃரி)
மாவடிப்பள்ளி
இலங்கை வாழ் முஸ்லிம்களே! ஜனாதிபதி தேர்தல் பற்றி இது உங்களின் கவனத்திற்கு>>>
Latest Jumuahs
Ash Sheikh Siyam(Rahmani)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Yoosuf Mufthi(Binnoori)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Malwana, Raxapana Jumua Masjidh
Ash Sheikh Hassan Fareed(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh M.I.M Rizwe Mufthi(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Colombo 12, Peer Sahib Street Ihsaniyyah Jumuah Masjith
Ash Sheikh Riyas Mufthi(Rashadi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Colombo 10, Pichus Lane, Muhiyadeen Jumua Masjidh
Ash Sheikh M.I.M Rizwe Mufthi(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Firthous Qaari(Furqani)
Colombo 04, Majma Ul Khairah Jumua Masjith (Nimal Road)
Latest Special Bayans
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Kurunegala, Mallawapitiya, Masjidhul Hasanath
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
Your Comments