
இஸ்லாத்தில் ஐந்தாம் பெரும் கடமையான ஹஜ் தொடர்பில் கடந்த சில வருடங்களாக பல சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் இருப்பது கவலைக்குரியதாகும். மேலும் புனித மார்க்கக் கடமையான ஹஜ்ஜை ஒரு சேவையாகவன்றி வருமானம் தரும் ஒரு வியாபாரமாக கருதுகின்ற நிலை வேதனைக்குரியதாகும்.ஒரு புனித கடமையின் பெயரால் ஏமாற்று,மோசடி,வாக்குறுதி மீறல் முதலான பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதானது அல்லாஹ்வின் சாபத்திற்கும்,கோபத்திற்கும் உரிய செயற்பாடுகளாகும்.இவ்வாண்டு ஹஜ் விவகாரம் ...